2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சரஸ்வதி வித்தியாலயம் முன்பாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ் , ஜுட் சமந்த)
மாராவில கொஸ்வாடி சரஸ்வதி வித்தியாலயம் முன்பாக பெற்றோர்கள் நேற்று புதன்கிழமை எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கொழும்பு-சிலாபம் வீதியின் போக்குவரத்து சில மணிநேரத்திற்கு  பாதிக்கப்பட்டிருந்தது.

பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மாராவில கொஸ்வாடி சரஸ்வதி வித்தியாலயமும் உள் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் காணப்பட்ட நிலையில் புதிய திட்டத்தின் பிரகாரம்  தரம் 6 முதல் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் மூடப்பட்டன.

தரம் 6 முதல் தரம் 11 வரையிலான வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களே வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்தே இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆரப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .