2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பொது கழிவறையின் பணிகளை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா,-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க


புத்தளம் சென். அன்றூஸ் ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் நிர்மாணிக்க  திட்டமிடப்பட்டுள்ள பொது கழிவறையின் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

புத்தளம் சென். அன்றூஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது புத்தளம் நகர சபையின் திட்டத்தை வரவேற்கும் அதேவேளை பாடசாலைக்கு அருகாமையில் இவ்வாறு பொதுக் கழிவறை அமைப்பது பொருத்தமற்றது. எனவே இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--