2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஆபாசக்காட்சி இறுவெட்டுக்களை விற்பனை செய்த நிலையம் முற்றுகை; உரிமையாளர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ஆபாசக்காட்சிகள் அடங்கிய இறுவெட்டுக்களை விற்பனை செய்வதாகக் கூறப்படும்  நிலையமொன்றின் உரிமையாளரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

ஆபாசக்காட்சிகள் அடங்கிய இறுவெட்டுக்களை விற்பனை செய்வதாகக் கூறப்படும்  இந்நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், ஆபாசக்காட்சிகளை சேமித்து வைத்திருந்த கணினியையும் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  அநுராதபுரம் சந்தைப் பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--