2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்டத்திற்கென தனியாக ஆசிரியர் போட்டி பரீட்சை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்
 

ஆசிரியர் போட்டி பரீட்சையின்போது, புத்தளம் மாவட்டதிற்கென தனியாக போட்டி பரீட்சை நடத்த எண்ணியுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

கல்பிட்டி, திகழி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'குருநாகல் மாவட்டத்துடன் ஒப்பிடுகையில் புத்தளம் மாவட்டத்தில் கல்வி துறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. எனவேதான் மாகாண ஆசிரிய போட்டி பரீட்சையின்போது குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்தோர் அதிகளவு சித்தியடைவதுடன் புத்தளம் மாவட்டத்தில் குறைவாக சித்தியடைகின்றனர்.

எனவே எதிர்காலத்தில் மாகாண ஆசிரியர் போட்டி பரீட்சை நடத்தும் போது குருநாகல் மாவட்டத்திற்கு வேறாகவும், புத்தளம் மாவட்டதிற்கு வேறாகவும் போட்டி பரீட்சை நடாத்த எண்ணியுள்ளேன்.

தொண்டர் ஆசிரியர்கள் பலர் புத்தளம் மாவட்டத்தில் தியாகத்துடன் கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு குறித்த பாடசாலையிலேயே சில வருடங்கள் கட்டாய கடமையாற்றும் நிபந்தனைகளுடன் விரைவில் நியமனங்கள் வழங்க எண்ணியுள்ளேன்.

எனக்கு முஸ்லிம்கள் அதிகளவு வாக்களித்துள்ளார்கள். அதுபோன்று அதிகளவு அரச அதிகாரிகள் எனக்கு வாக்களித்துள்ளார். எனவே அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை நான் நிறைவேற்ற முயல்வேன்' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--