2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் காயம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
 
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு மீனவக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை காலை இயந்திரப் படகு ஒன்று கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
 
மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு இயந்திரப் படகில் இரு மீனவர்களும் சென்று மீண்டும் கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் படகு கரை சேரும் தருவாயில் அதன் இயந்திரம் செயலிழந்துள்ளது. இதனையடுத்து படகு கடல் அலையில் சிக்கி கவிழ்ததில் இரு மீனவர்களும் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கியுள்ளதுடன் அங்கிருந்த ஏனைய மீனவர்கள் உடன் செயற்பட்டு அவர்களை மீட்டுள்ளனர். 
 
பின்னர் அவ்விருவரில் ஒருவர் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையிலும், மற்றையவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .