2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஐந்து மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் மரணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

ஓட்டுத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் தொழிலாளியான தங்கொட்டுவ தாமரக்குளி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த காமினி வீரசிங்க என்பவர் மற்றொருவரால் தாக்கப்பட்டு காயமடைந்து கடந்த ஐந்து மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்
.
 இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 28ம் திகதி இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தினத்தில் உயிரிழந்தவரும், கைது செய்யப்பட்டவரும் அதிக மது அருந்திய நிலையில் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறிய போதே சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த நபர் உடனடியாக அங்கிருந்து தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும்.அவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்  சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்;.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .