2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

விபத்தில் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மஹவெவ, கொஸ்வாடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மஹவௌ பிரதேசத்தைச் சேர்ந்த கருணாசீலி (வயது 51) என்பவர் மரணமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இப்பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை (20) இரவு லொறியொன்று மோட்டார் சைக்கிளொன்றுடன்  மோதியே இவ்விபத்து சம்பவித்தது.  நீர்கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி கணவனும் மனைவியும் பயணித்துக்கொண்டிருந்த  மோட்டார் சைக்கிளை, கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறி கடந்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து சம்பவித்தது.

இவ்விபத்தில் காயமடைந்த கணவனும் மனைவியும் உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அங்கு மனைவி மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  லொறியின் சாரதியை  மாரவில பொலிஸாக்ர் கைதுசெய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X