2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கருவலகஸ்வெவ  பிரதேசத்திலுள்ள புராதன ரஜமகா விகாரைக்குச் சொந்தமான நிலப்பரப்பில்; புதையல் தோண்டிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஐவரை நேற்று  வியாழக்கிழமை இரவு கைதுசெய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு கிடைத்த  தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன், நிலத்தை தோண்டுவதற்கான உபகரணங்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர். 

இவர்கள் புத்தளம், மதுரங்குளி,  மங்கள எலிய ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையிலிருந்து தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .