2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆன்மீக தியான ஒருமைப்பாட்டு எழுச்சி

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அனுராதபுரத்தில் ஐந்து இலட்சம் பேர் கூடும் ஆன்மீக தியான ஒருமைப்பாட்டு எழுச்சி நாளை சனிக்கிழமை இடம்பெறவிருப்பதாக சர்வோதையத் தலைவர் கலாநிதி ஆரியரட்ண தெரிவித்தார்.

இரவு 9.30 மணிக்கு ஏக காலத்தில் உலகம் பூராகவுமிருந்து 1.4 மில்லியன் மக்கள் ஒன்று கூடி உலக அமைதிக்காகவும் சகவாழ்வுக்காகவும் மனஒருநிலைப்பாட்டு தியானத்தில் ஈடுபடவிருக்கின்றார்கள் என்றும் சர்வோதயத் தலைவர் கலாநிதி ஆரியரட்ண தெரிவித்தார்.

அனுராதபரம் ருவன்வெலிசாயா விகாரையை மையமாகக் கொண்டு உலகம் பூராகவுமிருந்த இந்த தியானத்தில் பங்கு கொள்ளும் நிகழ்வுகள் நேரடியாக ஒலி, ஒளிபரப்பச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சர்வோதைய இயக்கத்தின் நிறைவேற்று உதவியாளர் எச்.ஜி.நிஸாந்த பிரிதிவிராஜ் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 27 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உலகிலுள்ள முக்கிய 5 மதங்களின் தலைவர்களும், சகல அரசியல் தலைவர்களும் என உலகிலுள்ள 200 நாடுகளிலிருந்து 1600 சர்வோதயத் தொண்டர்களும் இணைந்து இரண்டு மணித்தியால 'மைத்திரி பாவனா' தியானத்தில் பங்கு பற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரபலமான செயற்பாட்டாளர்களான அம்மணி கிரான்பேடி, கலாநிதி வந்தனா ஷிவா, கலாநிதி சுனேத்தா கிருஷ்ணன் ஆகிய பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .