2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்
 
சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலைக்க புதிய அதிபர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தற்போதைய அதிபரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் திங்கட்கிழமை(27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
சிலாபம் ஆனந்தா தேசிய கல்லூரியின் அதிபர் நாத்தாண்டி தம்மஸ்சர தேசிய கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அவரது வெற்றிடத்துக்கு ஆரியகம மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த இடமாற்றம் தொடர்பில் அதிருப்தியடைந்த கல்லூரியின் ஆசிரியர்கள் இன்று கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது. 
 
இந்நிலையில் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்காக சிலாபம் நகர சபைத் தலைவர் சட்டத்தரணி ஹிலரி பிரசன்ன அவ்விடத்திற்கு வருகை தந்து சகல தரப்பினருடனும் பேசி சமரசத்திற்கு முயன்ற போதும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. 
 
பின்னர் அவர் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேராவுடன் பேசி இதற்கு நல்லதொரு தீர்வைப் பெறுவதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .