2021 மே 08, சனிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டல்

Kogilavani   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தில் பதிவாகியுள்ள தொண்டர் ஆசிரியர்களிடமிருந்து அவர்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை சேகரிக்கும் நிகழ்வு புதன்கிழமை (11) காலை புத்தளம் நகரமண்டப வளாகத்தில் நடைபெற்றது.


புத்தளம் ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள்  சங்கம் கடந்த திங்கட்கிழமை (09) புத்தளத்தில் நடாத்திய வீதி மறியல் போராட்டம் வெற்றியளிப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாக தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


இதனையடுத்தே தொண்டர் ஆசிரியரிகளிடமிருந்து விபரங்கள் திரட்டப்படுகின்றன.


தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தில் பதிவாகியுள்ளவர்களை தவிர மேலும் பல தொண்டர் ஆசிரியர்களும் நகரமண்டப வளாகத்தில் ஒன்று கூடியிருந்தனர்.


இதுதொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள்  சங்கத்தின் தலைவர்  எம்.எம்.சப்ராஸ் கருத்து தெரிவிக்கையில்,


கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் இப்போதுதான் வெற்றியளிக்க துவங்கியுள்ளது. எமது சங்கத்தில் மொத்தம் 540 தொண்டர் ஆசிரியர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர். இன்று அவர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X