2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் மோதி யுவதி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியில், களுகமுவ இந்தனஹல  பிரதேசத்துக்கு அருகாமையில் வைத்து, நாரம்பல நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், பாதையை விட்டு விலகி வீதியில் நடந்து சென்ற யுவதியின் மீது மோதியதில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

புதன்கிழமை (05) இடம்பெற்ற இச்சம்பவத்தில் கழுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய விசாகா லசந்தி மதுசிகா என்பவரே உயிரிழந்துள்ளார். 

படுகாயங்களுக்கு உள்ளான யுவதி, சிரம்புகேதர வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார் எனவும் சடலம், பிரேத பரிசோதனையின் பொருட்டு சிரம்புகேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .