2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பஸ் மோதி 8 மாணவிகள் காயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகலை பிங்கிரிய ஹல்மில்லாவ பஸ் தரிப்பிடத்தில்  பஸ் வண்டியொன்று புகுந்து ஏற்பட்ட விபத்தினால் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முடிவடைந்து வீடு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸிற்காக மாணவிகள் காத்திருந்தபோது, அவ்வழியாக வந்த பஸ் திடீரென்று விலகிச் சென்று பஸ் தரிப்பிடத்தினுள் புகுந்து விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--