2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

திருடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                              

(அப்துல்லாஹ்)
 
நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்தாக கூறப்படும் ஒருவரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரன்வல ஆராச்சிக்கு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து கற்பிட்டி பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் திருடப்பட்ட ஒன்பது மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
 
தனியார் பஸ் ஒன்றில் தற்காலிக நடத்துனராக கடமைப்புரிபவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
புத்தளம், மதுரங்குளி, முந்தல், கீரியங்கள்ளி, புளிச்சாக்குளம் போன்ற பகுதிகளில் திருடப்பட்டு தலவில, பாலக்குடா, அலங்குடா, நுரைச்சோலை, கரம்பை போன்ற பகுதிகளில் விற்கப்பட்டுள்ளது.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான  இந்த மோட்டார் சைக்கிள்கள் கற்பிட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை சமர்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--