2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஆரச்சிகட்டுவவில் 484ஆவது பொலிஸ் நிலையம்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 484ஆவது பொலிஸ் நிலையம், சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டுவ  பிரதேசத்தில், அண்மையில் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் பொலிஸ் நிலையங்களை 600ஆக அதிகரித்தல் எனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் திட்டத்தின் கீழ், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய, குறித்த பொலிஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க ஸ்ரீவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி, எம்.எச்.எம்.நவவி, அசோக்க பிரியந்த, சாந்த குமார மற்றும் வடமேல், வடமத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிங்க குணவர்தன, சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் சுரஞ்ஜன் குமார பீரிஸ் உட்பட பொலிஸ் உயரதிகாரிகளும் சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

புதிதாக திறந்துவைக்கப்பட்ட  இந்தப் பொலிஸ் நிலையத்தின் கீழ், 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .