2021 மார்ச் 08, திங்கட்கிழமை

நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 19 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டைக்காடு கிராமத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில், செவ்வாய்க்கிழமை மாலை நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நடைபெற்றது.

சிறுநீரக நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கிலேயே, இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம், சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டைக்காடு அமைப்பாளர் என்டன் மார்சியஸ் தலைமயில் நடைபெற்ற நிகழ்வில், பங்குத் தந்தை மற்றும் ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் விக்டர் என்டனி பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் ஊடாக இந்தக் கிராமத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .