2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புத்தளத்தில் 15,328 பேர் புதிதாக வாக்களிக்கத் தகுதி

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

நாடாளுமன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் 15,328 பேர் புதிதாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனரென, புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்,  புத்தளம் மாவட்டத்தில் 599,042 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். எனினும், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 6,14, 370 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் தேர்தல் தொகுதியிலேயே, இம்முறை புதிதாக வாக்களிக்க அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனரென, புத்தளம் மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X