2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

விபத்தில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சை பலனின்றி மரணம்

Editorial   / 2020 ஜனவரி 03 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

 

மதுரங்குளி கடையாமோட்டை பிரதேசத்தில், டிசெம்பர் 28ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி, நேற்று வியாழக்கிழமை (2) உயிரிழந்துள்ளார்.

 

கொத்தான்தீவு ரஹ்மத்புரத்தைச் சேர்ந்த பெருக்குவற்றான் அல்மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில், தமிழ்மொழி பாடப்பிரிவுக்கான ஆசிரியராகக் கடமையாற்றி வந்த மொஹமட் ஷரீப் மொஹமட் மஹ்ரூப் (வயது 56) என்பவரே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிளிலும்  உழவு இயந்திரமும், கடையாமோட்டை பிரதேசத்தில் மோதிக்கொண்டதில், இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தன்  பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக ஐந்து நாள்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த ஆசிரியர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (02) உயிரிழந்துள்ளார்.

முந்தல் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .