2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

ஓட்டோ சாரதிகள் சங்கத்தினருக்கு உலர் உணவு

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம்-மதுரங்குளி ஓட்டோ சாரதிகள் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு, நேற்று (25) காலை நடைபெற்றது.

மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.ரி. அமானின் வேண்டுகோளுக்கு இணங்க, மதுரங்குளியிலுள்ள மேர்சி லங்கா நிறுவனம் குறித்த உலர் உணவுப் பொதிகளை வழங்கியிருந்தது.

குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்த ருவன் , மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.ரி.அமான் உட்பட பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர் உன பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மதுரங்குளி 3 ஸ்டார், வேலாசி, தொடுவா , பன்சல சந்தி ஆகிய நான்கு ஓட்டோ சங்கங்கள் மற்றும் மதுரங்குளி லொறி சங்க உறுப்பினர்கள் என 133 பேருக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .