2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியிலுள்ள சதொச கிளை மூடப்பட்டுள்ளதாக விசனம்

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி நகரிலுள்ள லங்கா சதொச விற்பனை நிலையம்,  கடந்த 20ஆம் திகதி  முதல் மூடப்பட்டுள்ளதாக,  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி , இந்த சதோச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.  இந்நிலையில், சதோச விற்பனை நிலையத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட வாடகை ஒப்பந்த காலம் இம்மாதம் 2020.06.30 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காது,  சதோச விற்பனை நிலையக் கட்டடத்தை மீளவும் கையளிக்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கற்பிட்டி, கண்டல்குழி , குறிஞ்சிப்பிட்டி மற்றும் பள்ளிவாசல்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த,  சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்  தமது தேவைகளுக்காக, கடந்த மூன்றரை வருடங்களாக பயன்படுத்தி வந்த இந்த சதொச விற்பனை நிலையத்தை இடமாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுமாறும்  இல்லையேல்,  இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--