2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

முந்தல் பிரதேச செயலக பிரிவில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

முந்தல் பிரதேச செயலக பிரிவில் டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற கூட்டத்தில், இவ்விடயம் தொடர்பாக கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

நாளை முதல் அனுஷ்டிக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வாரத்தில் ஒவ்வொரு தினமும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விளக்கப்பட்டன.

இதன்படி  டெங்கு ஒழிப்பு வாரத்தின் முதல் நாளில் டெங்கு நுளம்பு அதிகம் பெருகும் இடங்களைப் பரிசோதிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X