2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையின் உத்தியோகத்தரை அச்சுறுத்திய இருவர் கைது

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

கொபேஹேன வைத்தியசாலையின் உத்தியோகத்தர்  ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் 20 இலட்சம் ரூபா பணத்தைக் கேட்ட இரு சந்தேக நபர்களை நிக்கவெரட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் தன்னிடம் 20 இலட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் குறித்த உத்தியோகத்தர் நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த நிக்கவெரட்டி பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நிக்கவெரட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .