2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

புளுதிவயல் பிரதேசத்தில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 24 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு நடமாடும் சேவையும் மக்கள் தெளிவூட்டல் நிகழ்வும் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளுதிவயல் பிரதேசத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கை, காணி, சுகாதாரம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், ஏனைய பதிவு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வும் இதன்போது காணப்பட்டன.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், ஏ.எச்.எம்.ரியாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.முஸம்மில் உட்பட  அரசாங்க உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .