2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

இருபத்தைந்து வருடங்கள் பூர்த்தியில் கெதி ரிச்

Editorial   / 2017 மே 31 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டி யோதகம ‘கெதி ரிச் உணவுத் தயாரிப்பு பயிற்சி நிலையம்’ நிறுவப்பட்டு 25 வருட காலம் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு, பல விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் நிறுவனத்தினால் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இலவசமாக நடத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப செயலமர்வு விசேட கவனத்தை ஈர்த்துக் கொண்டது. நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், உணவுத் தயாரிப்பு தொழிலில் ஈடுபடுகின்ற மற்றும் ஈடுபடுவதற்கு எதிர்பார்க்கின்ற தொழில் முயற்சியாளர்கள் பலர் கலந்துகொண்டதுடன், அவர்களது எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், உணவுத் தயாரிப்பு தொழில்நுட்பம் தொடர்பில் சிறந்த அறிவு இதன் மூலம் தங்களுக்கு கிடைத்ததாக இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.  

 ஆசிய வலயத்தில் நுண் மற்றும் சிறிய அளவிலான உணவுத் தயாரிப்பு பிரிவுக்கு உணவுத் தொழில்நுட்ப சேவைகள் தொடர்பில் முழுமையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் முன்னனி வழங்குநராக சுமார் 25 ஆண்டுகள் தொழில்நுட்ப அறிவு மற்றும் தேர்ச்சியின் ஊடாக படிப்படியாக முன்நோக்கிச் சென்ற கெதி ரிச் நிறுவனமானது, உணவுத் தயாரிப்பு தொழில்நுட்ப நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக சமூகத்துக்கு வழங்கியுள்ள தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கை சுமார் 20,000க்கும் அதிகமாகும். அன்று தொடக்கம் இன்று வரை கெதி ரிச் நிறுவனம், தொழில்நுட்பத்தை நாட்டில் அறிமுகப்படுத்தி மேற்கொண்ட செயற்பணி தொடர்பில் மேலும் பொதுமக்களை அறிவுறுத்துவதன் மூலம் தமது செயற்பணியை விரிவானவாறு பிரபல்யப்படுத்துவது அவர்களது எதிர்கால நோக்கங்களின் ஒன்றாகவும் இருக்கின்றது.

 இந்த நோக்கத்தை வெற்றி பெறச் செய்வதற்கு நல்லாசி வேண்டி மதவழிபாடும் சங்கைக்குரிய மதகுருமார்களுக்கு அன்னதானமும் கெதி ரிச் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கெதி ரிச் முன்னோடிகளின் சேவைகளைப் பாராட்டும் பொருட்டு நினைவுச் சின்னமும் அன்றைய தினம் வழங்கப்பட்டதுடன், 25 வருட காலம் தமது பணிகளை வெற்றிகமாக நிறைவேற்றியமையின் ஊடாகவும், பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு நல்கியதன் ஊடாகவும் தமது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு கெதி ரிச் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .