Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
சிறிய நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கும் வங்கிகளுக்குமிடையிலான என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், சிறிய தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் எஸ்.வினோத், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ரீதியான உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் முகாமையாளர்கள், பிரதிநிதிகளுக்குமிடையிலான என்ரர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம் தொடர்பான விளக்கங்களை வழங்கியதுடன், இக்கடன் திட்டம் மற்றும் செயற்பாடு குறித்த தொழில் முயற்சியாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கங்களை வழங்கினர்.
இதன்போது மக்கள் வங்கியின் எஸ்.தனோஜன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மாவட்ட முகாமையாளர் கே.எம்.ஆர்.ரந்தெனிய மற்றும் பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கேதசத்தியநாதன், இலங்கை வங்கி மேற்தரக்கிளை முகாமையாளர் ஏ.பிரதீபன், கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ரி.ரஞ்சிதன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கினார்.
அரசாங்கத்தின் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்திக்கான என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டமான அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கிகளுடாக நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த என்டர் பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டத்தில் மக்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் நிதிக் கடன் சுமை என்பவற்றைக் குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் மிகக்குறைந்த கடன் வட்டியிலும், அத்துடன், அரசாங்கம் அதன் வட்டியின் அரைப்பகுதியைச் செலுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், ஆலோசனைச் செயற்திட்டங்கள், மேற்பார்வை முறைமைகள், பயிற்சிகள் வழங்கல் என பல்வேறு படிமுறைகளும் உற்பத்தி மற்றும் தொழில் முனைவோரான மக்களின் வாழ்வாதார பொருளாதார மேம்பாடு கருதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
24 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago