2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கண்டியில் Huawei காட்சியறை

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி சிட்டி சென்டரில் “Huawei அனுபவ காட்சியறையை” திறந்து வைத்துள்ளது. Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஷுண்லி வாங், Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க ஆகியோர், இந்தத் திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்துள்ளனர்.  

Huawei மற்றும் அதன் உற்பத்திகள்,  சேவைகள் தொடர்பில் அறிந்துகொள்ள விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை சேர்ப்பிக்கவேண்டும் என்பதே, Huawei அனுபவ காட்சியறையின் நோக்கமாகும். கண்டி சிட்டி சென்டரின் 2ஆவது மாடியில் அமைந்துள்ள இப்புதிய காட்சியறையில், கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலுள்ள திறன்பேசி ஆர்வலர்கள் நேரடியாக வருகை தந்து, வர்த்தகநாமம் பற்றிய அனுபவத்​ைத ​ெபற்று உரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிவதுடன், தமது சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள முடியும்.  

இப்புதிய முதலீடு தொடர்பில் Huawei சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் துரிதமான விஸ்தரிப்பு தொடர்பான Huawei இன் உறுதிமொழிக்கு அமைவாக, கொழும்புக்கு வெளியில் நகர்ந்து, இலங்கையிலுள்ள மற்றுமொரு முக்கிய நகரத்தில் கால்பதித்துள்ள இந்தப் பாரிய நகர்வையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். தற்போது இப்புதிய அனுபவ காட்சியறையின் துணையுடன், கண்டியிலுள்ள மக்கள் மிகவும் இலகுவாக Huawei வர்த்தகநாமத்தை எட்டுவதுடன், Huawei திறன்பேசி சாதனம் ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தமது
அபிலா​ைஷகளையும் மிக இலகுவில் பூர்த்திசெய்து கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டார். 

மக்கள் இக்காட்சியறைக்கு வருகை தந்து, அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திகளை நேரடியாக “அனுபவிக்கும்” வாய்ப்பைப் பெற்றுக்கொள்வது மட்டுமன்றி, இந்த அனுபவ காட்சியறையில் எந்தவொரு Huawei சாதனத்துக்கான தமது கொள்வனவு விண்ணப்பங்கள் மற்றும் கொள்வனவுகளையும் மேற்கொள்ள முடியும். இந்தக் காட்சியறைக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர்கள், பயனுள்ள தகவல்களைப் பெற்று, Huawei திறன்பேசிகள் மற்றும் சாதனங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிகளையும் அங்கு கடமையிலுள்ள, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, பிரத்தியேகமான விற்பனை உதவியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். 

லியு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “எமது வளர்ச்சி தொடர்ந்தும் சிறப்பான பாதையில் பயணித்துவரும் நிலையில், இலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் திறன்பேசி வர்த்தகநாமமாக மாறவேண்டும் என்பதில் Huawei தீவிர கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையில் தனது பிரசன்னத்தை அதிகரிக்கச் செய்வதிலும் Huawei வெற்றியீட்டியுள்ளது. இலங்கையை மிக முக்கியமான ஒரு சந்தையாக இனங்கண்டுள்ள Huawei, நாட்டில் விசாலமான சந்தைப்படுத்தல் வழிமுறைகளை ஸ்தாபிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .