2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சர்வோதய டிவலப்மன்ட் ஃபினான்ஸுடன் MegaPay கைகோர்ப்பு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வோதய டிவலப்மன்ட் ஃபினான்ஸ் (SDF), MegaPay பிரைவட் லிமிடெட் உடன் உடன்படிக்கை ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது. 

இந்தப் பங்காண்மையின் பிரகாரம் சர்வோதய டிவலப்மன்ட் ஃபினான்ஸ், Pay & Go இனால் வழங்கப்படும் Point Of Sales (POS) இயந்திரங்களை சர்வோதய சிரமதானவில் நிறுவி, கிராமிய மட்டத்தில் காணப்படும் சமூகங்களுக்கு வலுவூட்டும் அங்கிகாரம் பெற்ற சர்வோதய சிரமதான சமூக அலுவலர்களுக்கு, வாடிக்கையாளர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் அல்லது வியாபார வளாகங்களுக்கு விஜயம் செய்து, கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை திரட்டக்கூடியதாக இருக்கும்.

வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கு வருகை தந்து வழங்கப்படும் இந்தச் சேவையினூடாக வாடிக்கையாளர்களுக்குக் காலத்தையும் பணத்தையும் சேமித்துக் கொள்ள முடியும். தொடர்பாடல்களை மேம்படுத்தி, வாடிக்கையாளருக்கும் அலுவலகருக்குமிடையே உறுதியான உறவை கட்டியெழுப்பிக் கொள்ளவும் உதவியாக இந்த சேவை அமைந்திருக்கும்.

Pay&Go எனும் நாமத்தில் இயங்கும் MegaPay பிரைவட் லிமிடெட், வாடிக்கையாளர்களுக்கு வேகமான, சௌகரியமான வகையில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.

குறிப்பாக மின்சாரம், நீர், தொலைபேசி கட்டணப்பட்டியல்கள்,  கேபிள் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் போன்றவற்றுக்கான கொடுப்பனவுகளை இலகுவாக இந்த முறையினூடாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் முன்னணி கொடுப்பனவு சேவை வழங்குநர்களில் ஒன்றாக MegaPay வளர்ச்சியடைந்துள்ளதுடன், புத்தாக்கமான, தங்கியிருக்கக்கூடிய, சௌகரியமான, பாதுகாப்பான, இலகுவான கட்டணப்பட்டியல் கொடுப்பனவு கட்டமைப்பை நிறுவியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .