2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

செலான் வங்கிக்கு ஐந்து விருதுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM NASCO விருதுகள் 2018இல் செலான் வங்கியின் இளம் விற்பனை செயலணிக்கு ஐந்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. 

இரண்டு வருடங்கள் நிரம்பிய விற்பனை செயலணி, முன்னிலையாளர்கள், விற்பனை அதிகாரிகள் மற்றும் விற்பனை உதவி பிரிவுகளில் இரு தங்கம், இரு வெள்ளி மற்றும் வெண்கல விருதை தனதாக்கியிருந்தது.   

செலான் வங்கியின் வெற்றி தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எனது அணி தொடர்பில் அதிகம் பெருமையடைவதுடன், இத்தருணத்தில் அவர்ளுக்கு மீண்டுமொரு தடவை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

“இந்த ஆண்டின் SLIM NASCO விருதுகள் 2018 இல் ஐந்து விருதுகளை வென்றுள்ளமை தொடர்பில் பெருமையடைகிறோம். இந்த விருதுகள் எமது வாடிக்கையாளர்களுக்கு எம் இளம் விற்பனை செயலணியினர் காண்பிக்கும் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு போன்றவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

“எமது விற்பனை செயலணி சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. சந்தைப்படுத்தல் தேசிய அமைப்பினால் அவர்கள் கௌரவிக்கப்படுகின்றதை காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் வகையில், எமது ஊழியர்களை ஊக்குவித்து, அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கு அவசியமான பயிற்சிகளை பெற்றுக் கொடுக்கிறோம். இந்த விருதுகளினூடாக, சாதாரண நிலைக்கு அப்பால் சென்று, இலங்கையின் வங்கியியல் சேவைகள் துறையில் சிறந்த நிலையை எய்துவதற்கு எம்மை தூண்டியுள்ளது” என்றார். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், வங்கியியல் துறை முன்னிலையாளருக்கான தங்க விருது, தரிகா தில்ஷானி (கடன் அட்டை விற்பனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--