2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு தங்க விருது

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் திணைக்களத்தால் ஏற்பாடு செயப்பட்ட “சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்புத் தொடர்பில் 2016ஆம் ஆண்டுக்கான நாடளாவிய ரீதியிலான விருதுகள் வைபவத்தில் பாரியளவிலான உற்பத்திப் பிரிவில் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், தங்க விருதை வென்றுள்ளது.  

எந்தவொரு நாட்டிலும் உற்பத்தித்துறையில் நிறுவனங்கள் மத்தியில் தொழில்தருநர்-ஊழியர் இடையில் சிறப்பான தொழிற்றுறை உறவுமுறையை ஏற்படுத்துவது, அந்நாட்டின் பொருளாதார சுபீட்சத்துக்குப் பயணத்தில் மிகவும் முக்கியமானது. அத்தகைய நிறுவனம் ஒன்றில் நிலைநாட்டப்படுகின்ற தொழிற்றுறை சுமூக நிலைமையானது, அதிக உற்பத்தித்திறன் கொண்ட மற்றும் திறன்மிக்க உற்பத்தி நடைமுறையைத் தோற்றுவிக்கின்றது. உலக பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக மாற்றங்களின் தாக்கங்கள் காரணமாக பல நாடுகளில் தொழிற்றுறை சுமூக நிலையில் சரிவுகள் ஏற்படுகின்றன. தொழில்தருநர், ஊழியர் இடையிலான தொழிற்றுறைப் பிணக்குகள் காரணமாக ஏற்படும் பணி நிறுத்தங்களின் விளைவாக மனித நாட்கள் மற்றும் மணித்தியாலங்களில் ஏற்படும் இழப்பு பாரியதொன்றாகும். அவ்வாறான நிலைமைகளின் போது நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாக ஏராளமான எண்ணிக்கையில் ஊழியர்கள் தமது தொழில்களை இழப்பதுடன், இதன் காரணமாகப் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை மிகவும் பாரிய அளவாகக் காணப்படுகின்றது.  

தொழிலாளர் திணைக்களத்தின் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்புப் பிரிவின் வகிபாகத்தின் மூலமாக தொழில்தருநர்கள், முகாமையாளர்கள், ஊழியர் நிறுவனம், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நிறுவன மற்றும் திணைக்கள மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரை அரசாங்க அல்லது தனியார் நிறுவனங்களில் எழுகின்ற தொழிற்றுறைப் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் தொழிலாளர் சட்டங்கள் மூலமாக மட்டுமன்றி, இரு தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு, மனோபாவ ரீதியான மாற்றங்களைத் தோற்றுவிக்கும் ஒர் சூழலை ஏற்படுத்தி வருகின்றது.  

மேற்குறிப்பிட்ட நோக்கத்துக்காக, சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்புத் தொடர்பான செய்தியைப் பரப்புவதற்கு நாடளாவியரிதியில் இப்போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது. உள்நாட்டு உற்பத்தித்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மத்தியில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பை ஊக்குவித்து, சமூக உரையாடலின் மூலமாக சிறந்த தொழிற்றுறை உறவுமுறையொன்றைத் தோற்றுவிப்பது இதன் இலக்காகும். தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறப்பான தரத்திலான பணிச் சூழலைத் தோற்றுவிப்பதுடன், படைப்பாக்கத்திறன்களை மேம்படுத்துவதன் மூலமாகவும் அது முன்னெடுக்கப்படுகின்றது.  

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் இந்தச் சாதனை மிக்க வெற்றி தொடர்பில் அந்நிறுவனத்தின் குழும பொது முகாமையாளரான (மனித வளங்கள்) சஜித் விக்கிரமாராச்சி கருத்து வெளியிடுகையில், “நாம் கட்டியெழுப்பியுள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமை தொடர்பான மிகச் சிறந்த நடைமுறைகளுக்கு கிடைக்கப்பெற்ற மகத்தான ஓர் ஆசீர்வாதமாக இவ்விருது அமையப்பெற்றுள்ளது.

நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்களின் மேம்பாடு தொடர்பான ஒரு பொதுவான நோக்கத்தில் கவனம் செலுத்துவதற்கு, எமது தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுடனும் இணைந்து எமது பயணத்தை முன்னெடுப்பதற்கு இது எமக்கு மாபெரும் பக்கபலமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .