2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

தனிச்சிறப்பு மிக்க மண்டபங்களை வழங்கும் BMICH

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியளவில் மாநாடுகள் மற்றும் சந்திப்புகளை முன்னெடுப்பதற்கான மண்டபங்களை கொண்டிருக்கும் BMICH, நவீன வசதிகள் மற்றும் உயர் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. எழில்மிகு சூழலில் அமைந்துள்ள BMICH, சிறிய சந்திப்புகள் முதற்கொண்டு சர்வதேச மாநாடுகள் வரையான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற இடவதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. நிகழ்வுகளை நடாத்துவதற்கான 20 மண்டபங்களும், சகல விதமான நிகழ்வுகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் நெகிழ்வுத்தன்மையையும் கொண்டுள்ளன.

மண்டபங்களின் வகைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து BMICH இன் நிகழ்ச்சி மற்றும் இட ஒதுக்கீடுகளுக்கான முகாமையாளர் மஹேஷ் அமரசிங்க உடனான நேர்காணல் வருமாறு.

ஏனைய அமைவிடங்களைக் காட்டிலும் BMICH இல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்காக காணப்படும் வசதிகள் என்ன?

எமது குழு அறைகளில் 10-500 பேர் வரையில் அமர்வதற்கான வசதிகள் காணப்படுகின்றன. மாநாடுகள், சந்திப்புகள், செயலமர்வுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் இசைக் கச்சேரிகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

தியேட்டர், வகுப்பறை, 'U' வடிவம் மற்றும் விருந்துபசாரம் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் இருக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன், விருந்தினர்களுக்கு சிறப்பான உணர்வை (இருக்கைகள், லைட்டிங், மேடை அமைப்பு) வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

BMICH இன் வரலாறு மற்றும் அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கான பெருமைக்குரிய அமைவிடமாக நாம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளோம். நிபுணத்துவத்துடன் இணைந்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பிரத்தியேகமான அடையாளத்தை BMICH வழங்கி வருகிறது.

ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் BMICH இல் உள்ள பிரத்தியேகமான அனுகூலங்கள் என்ன?

நான் மேலே குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறோம். வசதிகள் மற்றும் இடத்தின் பிரத்தியேகமான அம்சங்கள் ஆகியன எம்மை மிகச்சிறந்த சேவைகளை வழங்க வழிவகுத்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரே சமயத்தில் நிகழ்வுகளை வழங்க விரும்பும் சந்தர்ப்பத்தில் பெரும்பாலான எமது மண்டபங்கள் பிரத்தியேகமானதாக விளங்குகின்றன.

இலகுவில் அணுகக்கூடிய வசதியான அமைவிடத்தில் BMICH காணப்படுகிறது. 2500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான தரிப்பிட வசதிகளை கொண்டுள்ளதுடன், ஒரே தினத்தில் ஒரே மண்டபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான தனிப்பட்ட சேவைகளையும் நாம்; வாடிக்கையாளருக்கு வழங்கி வருகிறோம். நெகிழ்ச்சியான அணுகு முறையை நாம் கொண்டுள்ளதை எம் வாடிக்கையாளர்கள் நன்கறிவர்.

ஒரு அமைவிடம் எனும் ரீதியில், வெற்றிகரமான நிகழ்வுகளை முன்னெடுத்து மிகச்சிறந்த சேவை வழங்குவதில் BMICH எவ்வாறு தம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது?

BMICH இன் சேவை என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிகப்பெரிய அனுகூலமாக அமைந்துள்ளது. ஒரு சில முக்கிய வாடிக்கையாளர்கள் BMICH உடன் 30 வருடங்களாக செயலாற்றி வருகின்றனர்.  

எமது ஊழியர்கள் மிகவும் தோழமையுடன் பழகுவதுடன், மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்காக தனிப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறோம். வெற்றிகரமான நிகழ்வுகளை முன்னெடுப்பதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வழிகாட்டுவதற்கு தயார் நிலையில் அவர்கள் எப்போதும் உள்ளனர்.

வர்த்தகச் சுற்றுலா MICE (சந்திப்புகள், சலுகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) போன்றவற்றை கவர்வதற்கான எதிர்கால திட்டங்கள் என்ன?

சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்குபற்றுவது எமது எதிர்கால திட்டங்களுள் உள்ளடக்கப்பட்டுள்ன. எமது அமைவிடம் குறித்து இன்னமும் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக எமது வசதிகள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் பரந்தளவான கூட்டாண்மை விளம்பரங்களை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

உள்நாட்டு/வெளிநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து ஏதேனும் மூலோபாய கைகோர்ப்புகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளீர்களா?

சர்வதேச காங்கிரஸ் மற்றும் மாநாட்டு சங்கத்தின் (ICCA) அங்கத்துவத்தை நாம் கொண்டுள்ளதுடன், அங்கத்துவ உரிமையை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் இலங்கை மாநாட்டு பணியகத்தின் (SLCB) பங்காளராக உள்ளதுடன், தொழில்முறை மாநாடு, கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கான இலங்கை சங்கத்தின் (SLAPCEO) உறுப்பினராகவும் காணப்படுகிறோம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .