2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

'நைன்வெல்ஸ்' வைத்தியசாலையின் இரத்த வங்கி திறப்பு

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்ஸஸ் இன்டர்நஷனலின் கையகப்படுத்தலைத் தொடர்ந்து தாய் சேய் நல வைத்தியசாலையான 'நைன்வெல்ஸ்' அண்மையில் இரத்த வங்கியைத் திறந்து வைத்துள்ளது. சர்வதேச பெண் நோய் மற்றும் மகப்பேற்றியல் மருத்துவக் கூட்டமைப்பின் (FIGO) முன்னாள் தலைவரும் பேராசிரியருமான சபாரட்ணம் அருள்குமரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இரத்த வங்கியைத் திறந்து வைத்தார்.

நைன்வெல்ஸ் வைத்தியசாலையின் புதிய பிரிவின் 3ஆவது மாடியில் அமைந்துள்ள குறித்த இரத்த வங்கியினூடாக, நோயாளர்கள் அவசர நிலைமைகளின் போது இரத்தம் மற்றும் இரத்தத் தயாரிப்புகளைக் காலதாமதமின்றி குறுகிய நேரத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தாதியரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் இரத்த வங்கியில் இரத்தப் பரிசோதனைகள், பரிசோதனை அறிக்கைகளை வழங்கல் என்பன கிரமமாக நடைபெறுகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையின் தரத்திற்கு அமைய, உள்ளக மற்றும் வெளியக நோயாளர்களுக்கும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கும் இரத்த மாதிரிகளை சேகரித்து வைத்தல் மற்றும் விநியோகிக்கும் செயன்முறைகள் நடைபெறுகின்றன.

இரத்தப் பரிமாற்ற மருத்துவரான குமதினி கொன்சல்கோரலே கருத்துத் தெரிவிக்கையில் 'இரத்தவங்கிகள் பரந்தளவில் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் தீர்வுகளை வழங்குகின்றன. அந்த வகையில் நைன்வெல்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இரத்த வங்கி மூலமாக குழந்தைகளுக்கும், தாய்மாருக்கும் மற்றும் ஏனைய நோயாளிகளுக்கும் நம்பகமான, பாதுகாப்பான, வசதியான சேவையை அவர்களது அவசர தேவைகளின் போது வழங்க நாம் அர்ப்பணிப்போடு செயலாற்றுகிறோம்' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .