2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

புதிய வாகனங்களின் மீதான வரி குறைப்புக்கு கோரிக்கை

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்படும் விலை மீது வரி விதிப்பை மேற்கொள்ளுமாறு துறைசார் நிபுணர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐடபிள்யூஎஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் தலைவர் ஆர்தர் சேனநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இந்த விடயம் தொடர்பில் திறைசேரிக்கு நாம் பிரதிநிதித்துவத்தை மேற்கொள்கிறோம். புதிய வாகனங்கள் மீது வரி விதிக்கப்படும் தற்போதைய நடைமுறையை எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார்.

வாகனத்தின் அசல் விலை மீது வரி விதிப்பை மேற்கொள்வது என்பதே மிகவும் வெளிப்படையான வரி விதிப்பாக அமையும். புத்தம் புதிய வாகனங்கள் மீதான வரி விதிப்பு என்பது, உற்பத்தியாளரின் பற்றுச்சீட்டின் மீது வரி விதிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமாக உற்பத்திச் செலவீனம் தொடர்பில் வெளிப்படையான தன்மையை காண்பிக்கும். இந்த விடயம் தொடர்பில் எவரேனும் மோசடி வழிமுறைகளை பின்பற்றுவார்களாயின், அவர்களுக்கு மட்டும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாறாக அனைத்து மோட்டார் வாகன இறக்குமதியாளர்களும் பாதிப்படையும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியா, மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர் பற்றுச்சீட்டு மீது வரி விதிக்கப்படுவதுடன், ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர் பற்றுச்சீட்டின் மீது வரி விதிக்கப்படுவதற்கு பதிலாக, பிரித்தானியாவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கமைவாகவே வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாற்றம் வர வேண்டும் எனும் வகையில் சேனநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X