2021 மே 08, சனிக்கிழமை

மைக்ரோசொவ்டின் வதிவிட முகாமையாளராகும் Brian Kealey

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய வதிவிட முகாமையாளராக வர்த்தகத் துறையில் அனுபங்கள் மற்றும் சிறப்புத்தேர்ச்சிகொண்ட அவுஸ்திரேலியரான Brian Kealey நியமிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொவ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அவர் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான வதிவிட முகாமையாளராக செப்டெம்பர் 01, 2015ஆம் திகதி முதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் முக்கியமான வர்த்தக மற்றும் பாவனையாளர் உற்பத்திகளை தயாரித்தல், சேவை வழங்கல்கள், நிறுவனத்தின் நன்மதிப்பு, நிறுவனத்தின் செயல்திறன், வாடிக்கையாளர்கள் மற்றும் இருதரப்புக்கும் இடையிலான பங்குதாரர் அனுபவங்கள் ஆகிய அனைத்து செயற்பாடுகளையும் புதிய வதிவிடப் பிரதிநிதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Brian Kealey கடந்த 17 வருடங்களாக பல்வேறு தொழில்நுட்ப ரீதியில் அனுபவங்களைக் கொண்டவர் எனவும், தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள மைக்ரோசொவ்ட் நிறுவனத்திற்கு தலைமைதாங்கியுள்ளமை மட்டுமன்றி, பல்வேறு முக்கியமான பொறுப்புக்களையும் வகித்ததோடு தலைமைப்பொறுப்பை சிறப்பாக வகிக்ககூடிய நபர் ஒருவர் என மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பொது முகாமையாளர் மிச்செல் சீமென்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் புதியதொரு ஆரம்பமாக அவுஸ்திரேலியாவில் இரு மைக்ரோசொவ்ட் கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக புதிய தொழில்முனைவோர் மற்றும் புதிய படைப்புக்கள் மீது கவனம் செலுத்தும் மாணவ குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு மையங்கள் ஊடாக ஆயிரக் கணக்கான தொழில்முனைவோர் மற்றும் மாணவ குழந்தைகளுக்கு பயற்சிகள் வழங்கப்படுவதுடன் அதனூடாக புதிய தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரு அடித்தளமாக அமையும்.

புதிய வதிவிட முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள Kealey கருத்து தெரிவிக்கையில், இந்த புதிய நியமிப்பு எனக்கு கிடைத்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையிலுள்ள அனுபவம் வாய்ந்த குழுவுடன் சேர்ந்து சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தமை பெரும் பாயக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறுவனத்தின் புதிய வர்த்தகமான Cloud வர்த்தகம் குறித்து தான் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்த அவர், அவரது இந்த குழுவுடன் இணைந்து மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் தொனிப்பொருளான 'உலகிலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கும் தமது செயற்பாடுகளை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்' என்பதற்கு அமைய செயற்பட தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X