2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு கௌரவிப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும், சிறந்த நிதி அறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில், நிதியியல் மற்றும் நிதியியல் சாராத அறிக்கையிடலுக்கான கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வாய்ந்த, நம்பத்தகுந்த மற்றும் மிகத்துல்லியமான அறிக்கையிடலுக்கான கௌரவிப்பைப் பெற்றிருந்தனர். 

நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில்,இந்த வருடாந்த நிதி அறிக்கை விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நிதி அறிக்கையிடலைப் பேணுவதும் இதன் நோக்காகும். பொது மற்றும் தனியார் துறைகளில் முன்னணி நிறுவனங்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இந்த விருதுகள் அமைந்துள்ளன.  

இந்த ஆண்டின் விருதுகள் வழங்கலின் போது, காப்புறுதித்துறையில் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. துறையில் காணப்படும் சிறந்த நிதி அறிக்கைகளில் ஒன்றாக யூனியன் அஷ்யூரன்ஸின் 2015ஆம் ஆண்டுக்குரிய நிதி அறிக்கையைத் தெரிவு செய்திருந்தது. 

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் நிதி மற்றும் திட்டமிடலுக்கான பொது முகாமையாளர் ஷெரின் காதர் கருத்துத் தெரிவிக்கையில், “ICASL வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், நாம் தொடர்ச்சியாக பேணி வரும் வெளிப்படைத்தன்மை, சிறந்த மேலாண்மை மற்றும் சிறப்புத்தன்மைக்காக கௌரவிப்பைப்பெற்றுள்ளோம். நிறுவனத்தின் “நம்பிக்கை” எனும் உறுதிமொழிக்கமைய முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுக்குக் கிடைத்த விருதாக இது அமைந்துள்ளது. எனவே, இந்த விருதை நாம் எமது சகல பங்காளர்களுக்கும் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .