Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 மே 17 , மு.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மயூராபதி அம்மன் நலன்புரிச் சங்கம் மற்றும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவல்லரி ஆகியன ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் நலன்புரிச் செயற்றிட்டம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தன.
'யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டமானது, யாழ்ப்பாணத்தில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அன்றாட வாழ்வுக்கு மிகவும் அவசியமான பொருட்களை வழங்கி அவர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது. கௌரவ முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் - முதலமைச்சர் (வட மாகாணம்) அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து இச்செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன. பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு 2016 ஏப்ரல் 9ஆம் திகதியன்று முதலமைச்சரின் தலைமையின் கீழ் கைதடியிலுள்ள விநாயகர் திருமண மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இரு நிறுவனங்களின் சார்பிலும், சமூகத்திலிருந்தும் பல மதிப்புக்குரிய விருந்தினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சுயதொழிலை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவுதல், சிறுவர்கள் மத்தியில் கல்வியை ஊக்குவித்து அதை முன்னெடுக்க உதவுதல், ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தியை ஏற்பாடு செய்து, பொறுப்பெடுத்து, ஒருங்கிணைத்து, உதவி மற்றும் ஊக்குவித்தல் ஆகிய பிரதான நோக்கங்களுடன் யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்காக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
750 சோடி சப்பாத்துக்கள், 400 பாடசாலை புத்தகப்பைகள், 100 தண்ணீர்ப் போத்தல்கள், 500 சேலைகள், 10 பெண்களுக்கான சைக்கிள்கள், 20 தையல் இயந்திரங்கள், 50 அவிப்பான் சாதனங்கள் மற்றும் குடிசைத் தொழிலை முன்னெடுக்க உதவியாக இடியப்பம் அவிக்கும் சாதனங்கள் மற்றும் 5 மின்சார நீர் இறைத்தல் இயந்திரங்கள் என ரூபா 2 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான பொருட்கள் நிகழ்வில் வைத்து, குறைந்த வருமானத்தை ஈட்டுகின்ற குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago