2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

லிட்ரோக்கு தொடர் விருதுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

   லிட்ரோ காஸ் லங்கா, அண்மையில் இலங்கை தேசிய கைத்தொழில் சபையின் (CNCI) சாதனையாளர் விருதையும், சிறந்த வர்த்தக நாமமிடல் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான கோல்டன் குளோப் டைகர்ஸ் 2018 விருதையும் அடுத்தடுத்து வென்று அதனுடைய கைத்தொழில் மற்றும் வணிக நாம வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை தேசிய கைத்தொழில் சபையினால் நடத்தப்பட்ட கௌரவமிக்க சாதனையாளர் விருதுகளில் மிகைப்படியான பெரிய வகையினத்தில் தங்க விருதை வென்றதன் மூலம், நிதி வலிமை, செயற்பாட்டுச் சிறப்பு, மனித வளத்துறையின் திறமைகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் கட்டுப்பாடுகள், தொழிநுட்ப நிபுணத்துவம், சந்தைப்படுத்தல் செயற்றிறன் மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு மற்றும் பேண்தகைமை துறைகளிலுள்ள பொறுப்புக்கள் ஆகியவற்றில் தனது திறமையை நிரூபித்துள்ளது.

கோல்டன் குளோப் டைகர்ஸ் இலங்கைப் பிரிவின் சந்தைப்படுத்தல் தலைமை விருதினுக்கு உரிமை கோரியதன் மூலம் வணிக நாமமிடுதல் மற்றும் சந்தைப்படுத்தலில் தனது திறமையைக் காட்டியுள்ளது.  

17ஆவது CNCI சாதனையாளர் விருது நிகழ்வு பிரதம அதிதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற அதேவேளை கோல்டன் குளோப் டைகர்ஸ் 2018 விருது வழங்கும் வைபவம் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.   

“இலங்கையில் ஒரு பிரதான கூட்டாண்மை நிறுவனமாக எமது பலம், எங்கள் தொழிற்றுறை மற்றும் எங்கள் வர்த்தக நாமத் திறமை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. எங்களது தொழில்நுட்ப வலிமை, புத்தாக்கம் மற்றும் பேண்தகைமை நடவடிக்கைகள் ஆகியவற்றை நாங்கள் மேம்படுத்த உறுதி பூண்டிருக்கின்ற அதேவேளை, எமது வர்த்தக நாமத்தைக் கட்டி எழுப்புவதில் கணிசமானளவு பிரயத்தனத்தை மேற்கொண்டிருக்கின்றோம். இவ்விரு விருதுகளும் எம்முடைய பெருமுயற்சிக்கு சான்றாயுள்ளது” என சந்தைப்படுத்தல், கூட்டாண்மை விவகாரங்கள் பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--