2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஸ்கான் புரொடக்ட்ஸ் விற்பனைக் குழுவினருக்கு வெகுமதிகள்

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ.டபிள்யூ.மெக்கி நிறுவனத்தின் ஸ்கான் புரொடக்ற்ஸ் பிரிவினது, உச்சக்கட்ட விற்பனையாளர்களின் சேவை அங்கீகரிக்கப்பட்டு 2014,2015ஆம் ஆண்டிற்கான விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த நட்சத்திர விருதுகள் வழங்கும் வைபவம், மாரவில பாம்பே ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது சீ.டபிள்யூ.மெக்கி குழும நிறுவனங்களின் உள்ளக வர்த்தகத்துறைக்குப் பொறுப்பாகவுள்ளவரும், சீ.டபிள்யூ. மெக்கி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான மங்கள பெரேரா கருத்து வெளியிடுகையில்,

'வெற்றியாளர்கள் மாத்திரமல்லாமல், நிறுவனத்தைச் சேர்ந்த சகல ஊழியர்களும், அவர்களின் விசுவாசம் மற்றும் எதிர்காலப் பெறுபேறுகளுக்கான அங்கீகாரத்தைப் பெறுவார்கள் என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை' என்று கூறினார்.

'விற்பனை வழிமுறைகளின் மூலம் ஒப்பற்ற விற்பனைக்கான தேடல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கை, பிரபல சந்தைப்படுத்தல் பயிற்சியாளர் ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து இரண்டாம் நாள் நிகழ்வுகளின் போது, 2015,2016ஆம் நிதியாண்டுக்கான முக்கிய அம்சமாக 'KPI உடன் இணைந்து வளர்ச்சி பெறுங்கள்' என்ற தொனிப்பொருளில் Scan Products இன் வருடாந்த வர்த்தகத் திட்டம் வெளியிடப்பட்டது. புதிதாகச் சேர்க்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், வளர்ச்சி மற்றும் உற்பத்தி என்பனவற்றுக்குப் பங்களிப்பைச் செய்வதன் மூலம், மொத்த உற்பத்தியை அதிகரித்தல் என்பது சம்பந்தமான முக்கியத்துவத்தை விற்பனையாளர்களுக்கு அறிவிப்பதன் மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .