2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸூக்கு ACHSI சான்றிதழ்

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸூக்கு மேலும் நான்காண்டுகளுக்கு முழுமையான சான்றுப்படுத்தலை உயர் மதிப்புமிக்க சர்வதேச சுகாதாரப் பராமரிப்புத் தரங்களுக்கான அவுஸ்திரேலிய கவுன்ஸில் (ACHSI) வழங்கியுள்ளது. சர்வதேசத் தரங்களுக்குச் சமமாக செய்முறைகளையும் கட்டுப்பாடுகளையும்; கண்டிப்பாக அனுசரித்தவாறு நோயாளி ஹொஸ்பிட்டலுக்கு வருகை தந்து வெளியேறிச் செல்லும் வரையில் உயர்தரமான நோயாளிப் பராமரிப்பை பேணுவதைப் போலவே சுகாதாரப் பராமரிப்பில் தங்கத் தரத்தைக் கொண்டு அதன் இரண்டாம் சுற்றில் உள்ள ஹொஸ்பிட்டல், தனது ஹொஸ்பிட்டலின் தலைசிறந்த சிகிச்சைப் பெறுபேறுகளையும் உறுதிசெய்கிறது. ஹேமாஸின் மூன்று ஹொஸ்பிட்டல்ஸ்களும் தற்போது சர்வதேச ரீதியான சான்றுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவற்றுள் தலவத்துகொட ஹொஸ்பிட்டல், சான்றுப்படுத்தல் அந்தஸ்தை அடைந்திருக்கையில் 4 ஆண்டுச் சுற்றுக்குப் பின்னர் வத்தளை மற்றும் காலி வைத்தியசாலைகள் மீளச் சான்றளித்தலை எய்தவுள்ளன.

ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ்களின் முகாமைப்பணிப்பாளர் வைத்தியர் லக்கித் பீரிஸ் கூறுகையில், 'ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ்களின் ஒட்டு மொத்த தரங்களுக்கு மேலதிக மட்ட சிறப்புத்தன்மையை மதிப்புமிக்க சான்றுப்படுத்தல் அளிக்கிறது. நோயாளியின் பாதுகாப்பும் நம்பிக்கையும் எமது கட்டளைப்பணியின் மையக்கருவாகும். அத்துடன் எமது நோயாளிகளுக்கு நாம் தரும் சேவை நன்மை தருவதை உறுதி செய்ய நாம் அனைத்தையும் செய்வோம். நோயாளிகளுக்கு உயர்தரமான பராமரிப்பை வழங்குவதன் எமது மன உறுதியை ACHSI யின் சான்றுப்படுத்தல் கோடிட்டுக் காட்டுகிறது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X