2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சிறப்பாக பணிபுரிந்த 100பேர் டுபாய் சுற்றுலாவில் பங்கேற்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமது நிறுவனத்தின் விற்பனை பிரிவில் சிறப்பாக பணிபுரிந்திருந்த 100 ஊழியர்களை டுபாய்க்கு சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பை ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் வழங்கியிருந்தது.

இவ்வாறு தெரிவாகியிருந்த ஊழியர்கள் 6 தினங்களை டுபாய் நகரில் களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், இக்கால கட்டத்தில் இவர்கள் பல்வேறு குழுநிலை செயற்பாடுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

உயர்தரமான சேவைகளை வழங்கி தமது விற்பனை துறையை மேம்படுத்தும் பொருட்டு ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் தனது மனிதவள அபிவிருத்தி மற்றும் ஊழியர் பயிற்சி செயற்பாடுகளுக்காக வருடாந்தம் 30 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொடர்ச்சியாக தனது சேவை தரத்தை அதிகரிக்க முடிந்துள்ளதுடன், சந்தையில் முன்னோடியாகவும் திகழ வழி வகுத்துள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .