2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் சிறந்த வங்கியாக ஹற்றன் நெஷனல் வங்கி தெரிவு

Super User   / 2010 ஜூலை 15 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரோமணி சர்வதேச  வர்த்தக சஞ்சிகை, இலங்கையின் மிகச் சிறந்த வங்கியாக ஹற்றன் நெஷனல் வங்கியை இரண்டாவது தடவையாக  தெரிவு செய்துள்ளது.

லண்டனில் இடம்பெற்ற ஈரோமணியின் 2010 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் இவ்விருது ஹற்றன் நெஷனல் வங்கிக்கு வழங்கப்பட்டது.

1992ஆம் ஆண்டிலிருந்து ஈரோமணி வர்த்தக சஞ்சிகை உலகின் சிறந்த நிதி நிறுவனங்களை தெரிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விருது குறித்து ஹற்றன் நஷனல் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  ராஜேந்திரா தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், "ஐரோப்பாவின் மதிப்பு வாய்ந்த ஈரோமணி நிதியியல் சஞ்சிகையினால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்படுவது மிகச்சிறந்த கௌவரமாகும்" எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .