Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபின்லேஸ் நிறுவனத்தின் பசறை பெருந்தோட்டப்பகுதி இலங்கையின் முதலாவது மழைக்காடு உடன்படிக்கை சான்றிதழை பெற்றுள்ளது. இதன் மூலம் ஃபின்லேஸ் கம்பனியின் விவசாய செயன்முறைகள் சான்றுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த மழைக்காடு உடன்படிக்கைச் சான்றிதழில் முக்கியமான பத்து விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன, சூழல் மற்றும் சமூக முகாமைத்துவ திட்டம், சூழல் பாதுகாப்பு திட்டம், வனவிலங்கு பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, ஊழியர்களுக்கான சிறந்த சலுகைகளும், உகந்த வேலைத்தளம், வேலைத்தள பாதுகாப்பும், சிறந்த சுகாதார வசதிகள், சமூக உறவுகள், நுணுக்கமான தேயிலை மரங்களை வெட்டும் முறை, மண் முகாமைத்துவம், நுணுக்கமான வீண்விரய முகாமைத்துவம் போன்றன.
ஃபின்லேஸ் தேயிலை பெருந்தோட்ட கம்பனியின் முகாமைத்துவத்தின் கீழ் உடப்புஸ்ஸல்லாவ பெருந்தோட்டம் மற்றும் அப்புகஸ்தன்ன பெருந்தோட்டம் போன்றன உள்ளடங்குகின்றன. இந்நிறுவனத்தின் பெருந்தோட்டங்கள், இரத்தினபுரி, ரக்வானை, ஹாலிஎல, பசறை, கண்டி மற்றும் நுவரெலியா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ளன. இந்நிறுவனத்தின் தலைமையகம் இங்கிரிய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பசறை பகுதியில், ஐந்து பெருந்தோட்டங்கள் அமைந்துள்ளன. அடாவத்தை, ஷோலண்ட்ஸ், ஹொப்டன், தம்மீரியா பி, தம்மீரியா ஏ போன்ற பெருந்தோட்டங்கள் இங்குள்ளன.
இந்த மழைக்காடு உடன்படிக்கை சான்றிதழ் பெற்றுக் கொண்டமை குறித்து பசறை குழுமத்தின் பிரதி பொது முகாமையாளர் கோசல ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில், குறுகிய காலப்பகுதியில், மழைக்காடு உடன்படிக்கை சான்றை பெறுவதற்கு அவசியமான 10 விடயங்களையும் எய்துவது சவலான விடயமாகவே காணப்பட்டது.
விசேடமாக, நுணுக்கமான வீண்விரய முகாமைத்துவம், நுணுக்கமான நீர் முகாமைத்துவம், வேலைத்தள பாதுகாப்பும், சிறந்த சுகாதார வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்துவது மிகவும் பரந்த செயற்பாடாகவும், ஊழியர்களை இதற்கு தயார்ப்படுத்துவது பெரும் சவாலான விடயமாகவும் காணப்பட்டது என்றார்.
தம்மீரியா பி பெருந்தோட்டத்தின் முகாமையாளர் சுதத் ஆரியதிலக கருத்து தெரிவி;க்கையில், 'எமது பிரதான நோக்கங்களாக மண்ணின் வளத்தை பேணலும், கட்டுக்கோப்பான விவசாய பசளைகளின் பாவனை மற்றும் நுணுக்கமான தேயிலை மரங்களை வெட்டும் முறைகளை கையாளல் போன்றனவாக இருந்தன' என்றார்.
அடாவத்தை பெருந்தோட்டத்தின் உதவி முகாமையாளர் மனோஜ் பதிரகே கருத்து தெரிவிக்கையில், 'எமது சமூகத்தின் சுகாதார முகாமைத்துவத்தை பேணும் வகையில், அனைத்து பெருந்தோட்டங்களின் முகாமையாளர்களின் மேற்பார்வையுடன் நுணுக்கமான வீண்விரய முகாமைத்துவ முறையை அறிமுகப்படுத்தியிருந்தோம். இதற்காக பயோ மாஸ் கொன்வர்ட்டர்கள், வடிகால் கட்டுகள், மரக்கட்டுகள் போன்றவற்றை அமைந்திருந்தோம்' என்றார்.
இந்த பெருந்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேடமான சமூக பொறுப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயற்திட்டங்களின் மூலமாகவே இச்சான்றிதழை பெற முடிந்ததாக பசறை பிராந்தியத்துக்கான மருத்துவ உதவியாளர் பத்மசிறி குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சிரிசி ரக தேயிலையை தயாரிக்கும் ஃபின்லேஸ் நிறுவனம், 19 தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. இவற்றுக்கு ஈரிபி, எச்.ஏசி.சிபி, ஐ.எஸ்.ஓ 22000 மற்றும் சிகியுசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago