2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

கொழும்பில் ரமழான் மற்றும் ஈத் பஸார்

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் ரமழான் பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு, இலங்கை -பாகிஸ்தான் நட்புறவு சம்மேளனத்தால், 'ரமழான் மற்றும் ஈத்  பஸார்' விற்பனை கண்காட்சி நிகழ்வு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள DBU ஹோல் மற்றும் கார்டினில் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த விற்பனை கண்காட்சி நிகழ்வில் 80 இற்கும் அதிகமான காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இங்கு ரமழான் பண்டிகையை கொண்டாட அவசியமான அனைத்துவிதமான ஆடை அலங்கார பொருட்களும், உணவு பொருட்களும் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியில் ஒருபகுதி, பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--