Super User / 2010 நவம்பர் 10 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவுள்ள அலங்கார திருவிழாவில் காபன் பாவனை கட்டுப்படுத்தல் மற்றும் ஆலோசனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காபன் கொன்சல்டிங் கம்பனி முன்வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக பிரித்தானியாவின் காபன் நியுட்ரல் கம்பனியின் அனுசரணையையும் பெற்றுக் கொள்ளவுள்ளது.
இது குறித்து காபன் கொன்சல்டிங் கம்பனியின் தலைமை அதிகாரி சுப்ரமணியம் ஈஸ்வரன் கருத்து தெரிக்கையில், 'எமது சூழலை அர்த்தமுள்ள முறையில் மதிப்பளிப்பதை உலகிற்கு உணர்த்துவதற்கு இந்த அலங்கார திருவிழாவின் மூலம் சிறந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
இலங்கை அலங்கார திருவிழாவின் தாபகர் லின்டா ஸ்பெல்டெவின்டே இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'இந்த அலங்கார திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளதன் மூலம் நாம் தொழிற்துறைகள் தமது இலாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதை தவிர்த்து சூழல் மாசற்ற உலகுக்கு பங்களிப்பு வழங்குவதுடன், புதிய சிந்தனைகளையும் ஆக்கங்களையும் முன்னெடுப்பதை அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம். காபன் கொன்சல்டிங் கம்பனி எமது இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் எம்முடன் கைகோர்த்து இந்த நிகழ்வில் செயற்பட முன்வந்துள்ளமை எமக்கு பெரும்
மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
காபன் நியுட்ரல் கம்பனியின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமை அதிகாரி ரனீ விர்தீ கருத்து தெரிவிக்கையில், 'காபன் கொன்சல்டிங் கம்பனி மற்றும் காபன் நியுட்ரல் கம்பனி என்பன இணைந்து சர்வதேச வளங்களை பிரயோகித்து இந்த அலங்கார திருவிழாவிற்கு தமது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முன்வந்துள்ளன. சுத்தமான சூழல் எனும் தொனிப்பொருளை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்' என கூறினார்.
அலங்கார கல்வியகம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், மாஸ் ஹோல்டிங்ஸ் இன் பிரதான அனுசரணையில் நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இலங்கை அலங்கார திருவிழா மவுன்ட்லேவ்னியா ஹோட்டலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மேலதிக விபரங்கள் www.srilankadesignfestival.com எனும் முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படவிளக்கம்:
காபன் கொன்சல்டிங் கம்பனியின் அதிகாரிகள் உள்நாட்டின் உற்பத்தி நிலையமொன்றை
பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
6 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago