2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

'யூ.கே.ஈ' பரிசளிப்பு விழா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஹோம் போஃர் வெடிங் காட்ஸ்' என அறியப்படும் யூ.கே.ஈ (UKAAYE) வின் 15அவது ஆண்டு நிறைவையொட்டிய சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் ஒன்றுகூடலும் கடந்த 14அம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
 
'யூ.கே.ஈ'யின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தலைமை தாங்கி நடத்திய இந்நிகழ்வில் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கம்பவாரிதி ஜெயராஜ் விஷேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த விஷேட திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் அதிர்ஷ்டசாலிகளான வாடிக்கையாளர்கள் இரு தம்பதிகள் விமானப் பயணச் சீட்டுக்களைப் பெறுவர்.

இத்திட்டத்தின் முதல் மாதத்தில் இடம்பெற்ற சீட்டிழுப்பில் மட்டக்களப்பைச் சேர்ந்த திரு.திருமதி.நிரோஷன் மகசுமேதை, வவுனியாவைச் சேர்ந்த திரு.திருமதி.சிவபாலமுகுந்தன், துஷ்யந்தி ஆகிய தம்பதிகள் வெற்றியாளர்களாயினர்.

இந்த நிகழ்வில் நீண்டகால சேவைக்கான விருதை சி.ஜேசுதாசன், பீ.அந்தனி ஆகியோரும் அதிசிறந்த சேவைக்கான விருதை வி.சுகதேவனும் பெற்றுக்கொண்டனர். Pix by:- Kithsiri de Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--