Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நோய்க்காவி தடுப்பு குறியீடான மோர்ட்டீன், தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து தேசிய மட்டத்தில் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு திட்டத்தை அண்மையில் வெற்றிகரமாக பூர்த்தி செய்தது.
'மோர்ட்டீன் நோய் தடுப்பு' எனும் திட்டத்தின் தொடர்ச்சியான நான்காவது வருட திட்டத்தின் உள்ளங்களமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இத்திட்டம் மேல், மத்திய, தென், வடமத்திய மாகாணங்களில் 200 நகரங்களை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்துக்கு பிரதேச சபைகள், மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் சேவை நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தன.
இத்திட்டம் குறித்து ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாசுல் சௌத்திரி கருத்து தெரிவிக்கையில், "மோர்ட்டீன் நோய் பரவுவதை தடுக்கும்' எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்குகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு நுளம்புகளின் மூலம் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கங்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்த மோர்ட்டீன் பல வகைகளில் உதவுகிறது. ஆயினும் மக்கள் மிகவும் அடிப்படையான சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார்களானால், நுளம்புகளால் பரவும் நோய்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வாறான அடிப்படையான பழக்கவழக்கங்கள் குறித்த போதனையையே நாம் மக்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளின் மூலம் வழங்கி வருகிறோம்" என்றார்.
'மோர்ட்டீன் பொருள் குழும முகாமையாளர்' சுராங்கி பெர்னாண்டோ கருத்து தெரிவி;க்கையில், "பொசொன் பௌர்ணமியுடன் அநுராதபுரத்தில் ஆரம்பமான தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள், கதிர்காமம் வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்களுக்கு இந்த கருத்தரங்கின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது. அதிகளவு பொதுமக்கள் விழாக் காலங்களில் ஒன்று சேர்வதால் அதிகளவு கழிவுப் பொருட்களும் சேர்கின்றன. தனிநபர் ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டத்தையும் முன்னெடுத்திருந்தோம். 'மோர்ட்டீன் நோய் தடுப்பு' எனும் தலைப்பில் நடமாடும் விழிப்புணர்வு குழுவொன்று நாடு பூராகவும் வெற்றிகரமாக திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இந்த விழிப்புணர்வு செயற்பாடுகளை பொது இடங்களான, பேருந்து தரிப்பிடங்கள், சந்தைகள் மற்றும் மத வழிப்பாட்டுத்தலங்களில் நடத்தியிருந்தோம். டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தனிநபரினதும், உள்ளுர் சமுதாயத்தினதும் கடமையாக இருக்கும் வேளையில், நாம் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டோம்" என்றார்.
ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சர்காரியா அஹமட் கருத்து தெரிவிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளில் நாம் முன்னெடுத்த இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுப்பதற்காக நாம் 20 மில்லியன் ரூபாவை செலவு செய்திருந்தோம். இது போன்றதொரு பாரிய செயற்திட்டத்தின் வெற்றிகரமாக பலன்களை பெற்றுக்கொண்டது எமக்கும் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. தேசத்தின் நலனுக்காக எதிர்காலத்திலும் தேவைக்கேற்ப இது போன்ற திட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்.
2007ஆம் ஆண்டு ஆரம்பமான மோர்ட்டீனின் விழிப்புணர்வு திட்டம், 'ஆபரேஷன் ரெட் அல்லர்ட' எனும் தலைப்பில் அமைந்திருந்தது. 2008 இல் முன்னெடுக்கப்பட்ட மோர்ட்டீன் ளுடுயுஆ விழிப்புணர்வு திட்டத்துக்கு கல்வி திணைக்களமும், சுகாதார அமைச்சும் ஆதரவு வழங்கியிருந்தது. இத்திட்டமானது 130 பகுதிகள் மற்றும் 25 தேசிய பாடசாலைகள் உள்ளடங்கலாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு மோர்ட்டீன் செயலணி பல்வேறுவிதமான நிகழ்வுகளின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஈடுபட்டிருந்தது.
உள்ளுரிலும் சர்வதேச ரீதியிலும் புகழ் பெற்ற நோய்காவி எதிரியாக திகழும் ரெக்கிட் பென்கீசர் தயாரிப்புகள், வீட்டுப்பாவனை, சுகாதாரம், சுய காப்பு பிரிவுகளில் தமது தயாரிப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த மோர்ட்டீன் விழிப்புணர்வு திட்டத்தில் மோர்ட்டீன் செயலணி பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
13 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
1 hours ago