Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எடிசலாட் தனது 13 ஆவது 'சொப் இன் சொப்' நிலையத்தை கொழும்பு புஞ்சி பொரளை பகுதியில் அமைந்துள்ள கடவுச்சீட்டு வழங்கும் காரியாலயத்தில் நிறுவியுள்ளது.
இந்த நிலையத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு இணைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் புPசுளு மற்றும் ஈமெயில் செயற்படுத்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் செயற்படுத்தல், இணைப்புகள் மாற்றல், பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் இலவச இணைய பாவனை போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த நிலையம் வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். இந்த நிலையத்தை எடிசலாட் நிறுவனத்தின் பிரதம விற்பனை அதிகாரி சஞ்சீவ சமரசிங்க ஆரம்பித்து வைப்பதையும், அருகில் முற்கொடுப்பனவு பிரிவின் வர்த்தக குறியீட்டு முகாமையாளர் ஷமீல் பிஷ்ரி, விற்பனை மற்றும் விநியோகத்தர் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் பராக்கிரம விஜேரத்ன மற்றும் குறியீட்டு சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் சுன்ஜீவ பெரேரா ஆகியோர் காணப்படுவதை படத்தில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
25 minute ago
32 minute ago