2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நயீனாதீவில் இலங்கை வங்கி கிளை

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலங்கை வங்கியினது புதிய கிளையொன்று எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணிக்கு யாழ். நயீனாதீவில் திறந்து வைக்கப்படவள்ளது.

இலங்கை வங்கியின் ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் குலசேகரம் சிவஞானசுந்தரம் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்வங்கித்திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி விக்கிரம சிங்க கலந்து கொண்டு வங்கியின் கிளையினைத் திறந்து வைக்கவுள்ளார்.

மேற்படி வங்கிக் கிளையின் செயற்பாடுகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்ட வங்கிச் செயற்பாடாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .