Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
ஹட்டன் நஷனல் வங்கியினால் விவசாயிகளுக்கான 'ரன்கொவிய' விவசாய கடனுதவித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை அடகு வைத்து மிகக் குறைந்த வட்டியில் விவாசயத்துக்கான கடன் வழங்குவதே இக்கடனுதவித் திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
ஹட்டன் நஷனல் வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய கிராமங்களில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் நடத்தப்பட்டது.
300க்கும் அதிகமான விவசாயிகள் பங்குபற்றிய இந்த செயலமர்வின் போதே ரன்கொவிய விவசாய கடனுதவித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'அறுவடையினால் கிடைக்கும் உற்பத்தி நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக களஞ்சியங்களைக் கட்டுவதற்கும் வங்கி உதவ தயாராக இருப்பதாகவும்' வங்கியின் கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஏ.வி.பீடில் செயலமர்வில் தெரிவித்தார்.
வெங்காயம் மற்றும் நெல் ஆகிய பயிர்ச்செய்கைகள் குறித்த அறிவூட்டல் பயிற்சிகள் விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்பட்டன. வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் வங்கி அலுவல்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் சி.பி.அபயவிக்கிரம மற்றும் சிரேஷ்ட பிரதி பொதுமுகாமையாளர் நிஹால் கெகுலாவெல முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது விவசாயிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் நெல் அறுவடை இயந்திரம் மற்றும் கடனுதவிகள் வங்கியின் பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025