2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் கழகத்துக்கு எடிசலாட் இணைப்புகள்

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் கழகத்துக்கு எடிசலாட் இணைப்புகளை வழங்க முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த கழகத்தின் அங்கத்தவர்கள் பெற்றுக்கொள்ளும் இணைப்புகள் விசேட வெகுமதிகளை கொண்டிருப்பதுடன், இந்த இணைப்புகளின் மூலம் பெறப்படும் இலாபத்தில் ஒரு பகுதியை எடிசலாட் பழைய மாணவர் கழகத்தின் வளர்;ச்சிக்காக மீள வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடலின் போது பழைய மாணவர் கழகத்தின் தலைவர் நாலக சேனநாயக்க, திட்ட தலைவர் ரவின் பஸ்நாயக்க, எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க மற்றும் எடிசலாட் நிறுவனத்தின் பிராந்திய வர்த்தக முகாமையாளர் நிரோஷன் விஜேசுந்தர ஆகியோர் காணப்படுவதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .