2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஓரக்கிள் கல்வி மையத்தின் 'திங்க் குவெஸ்ட் 2011' சர்வதேச போட்டிகள்

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

ஒரக்கிள் கல்வி மையம் சர்வதேச ரீதியில் விண்ணப்பங் கோரியுள்ள 'திங்க் குவெஸ்ட் 2011' போட்டிகளில் இலங்கை மாணவர்கள் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிக்கலான பிரச்சனை ஒன்றை தமது அறிவாற்றல், தொடர்பாடல் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்டு எவ்வாறு தீர்ப்பது குறித்து தமது ஆக்கங்கங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இப்போட்டியில் பங்குபற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 22 வயது வரையிலான மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபற்ற முடியும்.

 

 

ஒரக்கிள் கூட்டுறவு பிரிவின் பிரதி தலைவர் பிராட் சஃவ்வர் கருத்து வெளியிடுகையில், மாணவர் குழுவொன்று இணைந்து தமக்கு ஆர்வமான பாடங்களில் உள்ளார்ந்தமாக செயற்படுவார்களாயின் மிகவும் கவர்ச்சிகரமானதும் வெற்றிகரமானதுமான வெளிப்பாடுகளை அவர்களுக்கு எட்ட முடியும் என்பது எமது அனுபவத்தி;ன் மூலம் வெளிப்படுகிறது.


இந்த திட்டம் குறித்து திங்க் குவெஸ்ட் பயிற்சியாளரும், விருதுகள் பல வென்ற ஆசிரியருமான ஜேன் போலஸ் கருத்து தெரிவிக்கையில், "இந்த திட்டம் எனது வகுப்பறையின் அமைப்பையே மாற்றி அமைத்தது. இந்த திட்டம் மாணவர்களுக்கு நடைமுறை பிரச்சனைகள் குறித்து சிந்திக்க வழி கோலுவதுடன், சமுதாயத்துடன் இணைந்து இணையத்தளங்களை உருவாக்கி சர்வதேச ரீதியில் தமது தீர்வைகளை வழங்கும் திறமையை வெளிக் கொணருவாதாக அமைந்துள்ளது.
அவர்கள் 21ஆம் நூற்றாண்டுக்கு மிக அத்தியாவசியமான ஆளுமைகள், எவ்வாறு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவது, பெறுமதியான பகிர்ந்துகொள்ளக் கூடிய பொருளடக்கங்களை தயாரித்தல் மற்றும் வறையறைகளை கடந்து பங்காளர்களை தேடல் போன்ற விடயங்களை கற்றுவருகின்றனர்.

இந்த வருடம் ஒரக்கிள் கல்வி மையம் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்னரை விட அதிகளவான மாணவர்களை கவர்ந்து கொள்ள முடியுமொன அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், திங்க் குவெஸ்ட் செயற்திட்டங்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .